6 வருடங்களின் பின்னர் விடுதலையான கட்டளை தளபதி
51 view
விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றையதினம் 6 வருட சிறை தண்டனை நிறைவு பெற்ற நிலையில் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி தற்போது நிரந்தரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் விடுதலை புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதியாக செயற்பட்டிருந்த ராம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 19 யுத்தம் முடிந்த பின்னர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பின் கீழ் அவர் அம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் குடியேறி வாழ்வாதாரமாக விவசாயம் மேற்கொண்டு…
The post 6 வருடங்களின் பின்னர் விடுதலையான கட்டளை தளபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 6 வருடங்களின் பின்னர் விடுதலையான கட்டளை தளபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
