கோட்டபாய துரத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன-இம்ரான் எம்.பி!
37 view
கோட்டபாய துரத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இன்று (19) ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கான வேட்புமனுவை வாபஸ் வாங்க எடுத்த தீர்மானமானது பல தரப்புக்களுடன் பல கட்டமாக நடாத்திய பேச்சுவார்தையின் பின்னர் எடுக்கப்பட்ட கடினமான தீர்மானமாகும். நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை சீராக்க நாமும் சில தியாகங்களை செய்ய வேண்டும்.இது அரசியல் இலாபம் தேடும் நேரமல்ல.அரசியல் ஸ்திரத்தனமையை ஏற்படுத்தி சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்து குறுகிய காலத்துக்குள் தேர்தல் ஒன்றுக்குள் செல்ல சஜித் பிரேமதாச அவர்கள் வரலாற்று முக்கியத்துவமிக்க முன்மாதிரி ஒன்றை செய்துள்ளார். கோட்டபாய துரத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன.நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பாராளுமன்றத்துக்குள் இன்னும் பொதுஜன பெரமுனவே பெரும்பான்மை.ஆகவே 45 க்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியால் தனியே நின்று அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது என்பதே…
The post கோட்டபாய துரத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன-இம்ரான் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டபாய துரத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன-இம்ரான் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
