இடைக்கால ஜனாதிபதி தெரிவு: தமிழ் கட்சிகள் பொறுப்போடு செயற்பட வேண்டும்- சமத்துவக் கட்சி கோரிக்கை!
14 view
இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் போட்டியில் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் குறிப்பாகத் தமிழ்த்தரப்புக்கட்சிகள் மிகப் பொறுப்போடும் நிதானத்தோடும் செயற்பட வேண்டும் என சமத்துவக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. போட்டியில் ஈடுபடும் வேட்பாளர்களிடம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அபிலாஷைகள்,பிரச்சினைகளுக்கான தீர்வுக்கான உத்தரவாதத்தை கோர வேண்டும். என சமத்துவக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்ப்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் மு. சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் அரசியல் பொருளாதார நிலவரம் மிக மோசமான அளவுக்குநெருக்கடிக்குள்ளாகி மக்களுடைய நாளாந்த வாழ்க்கையே பெரும்சவாலாகியிருக்கிறது. வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு எதிர்காலம்எப்படி அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு எவரிடத்திலும் பதிலைக்காணமுடியவில்லை. இதனால் மக்கள் போராட்டம் வலுப்பெற்று நிலையான அரசியல்பொருளாதார மாற்றத்தைக் கோரிநிற்கிறது. இந்த நிலையிலும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தென்னிலங்கைஅரசியற் கட்சிகள் உட்பட தமிழ்,முஸ்லிம், மலையகக் கட்சிகள் அனைத்தும்அரசியற் குழப்பத்திலும் வழமையான சூதாட்டத்திலுமே ஈடுபடுகின்றன. இது நாட்டில் மேலும் பல நெருக்கடிகளை…
The post இடைக்கால ஜனாதிபதி தெரிவு: தமிழ் கட்சிகள் பொறுப்போடு செயற்பட வேண்டும்- சமத்துவக் கட்சி கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இடைக்கால ஜனாதிபதி தெரிவு: தமிழ் கட்சிகள் பொறுப்போடு செயற்பட வேண்டும்- சமத்துவக் கட்சி கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
