மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குவிக்கப்படும் இராணுவம்
14 view
நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டார். ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலை கருத்திற்கொண்டு, மக்களின் பாதுகாப்பையும், நாட்டின் பாதுகாப்பையும், உறுதி செய்வதற்கும், மக்களின் வாழ்க்கைக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இன்றைய தினம் கொழும்பு நகரிலும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர், பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முற்பட்டால் அவர்களை தடுத்து நிறுத்தவும் கலைந்து செல்லவும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலகத்தடுப்பு பிரிவுகள்…
The post மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குவிக்கப்படும் இராணுவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குவிக்கப்படும் இராணுவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
