மலையக மக்கள் தொடர்ச்சியாக அடிமையாகவும் அமைதியாகவும் இருக்கமாட்டார்கள்- கனகராஜ் எச்சரிக்கை!

24 view
இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மலையக மக்கள் சொல்லொன்னா துயரங்களுக்கு முகங் கொடுத்துக்கொண்டு அமைதிகாத்துக்கொண்டு இருக்கிறார்கள். எமது மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அதிகாரத் தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.  தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை தொடர்பாக கனகராஜ் கருத்து தெரிவித்தார். தற்போதைய நிலைக்கு நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வந்த இனவாதமும் சோம்பேறித்தனமும் காரணமாகும். நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாய் திகழ்ந்த பெருந்தோட்ட பொருளாதாரத்தை இனவாத கண்ணோட்டத்தில் கையாண்டதால் தான் பெருந்தோட்டத்துறை இன்று பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் தோட்டங்களில் காணப்படுகின்ற கைவிடப்பட்ட தரிசு காணிகளை அந்தந்த தோட்டங்களில் இருக்கின்ற குடும்பங்களுக்கு வழங்கி அவர்களுடைய வாழ்வாதாரதை கொண்டு செல்வதற்கான வாய்ப்பை தரும்படி கேட்டும் எமது கோரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டு வருகின்றது. கண்ணுக்கு முன் காணிகள் காடாக கிடக்கின்ற போது…
The post மலையக மக்கள் தொடர்ச்சியாக அடிமையாகவும் அமைதியாகவும் இருக்கமாட்டார்கள்- கனகராஜ் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース