மாணவியின் மரணத்தில் தொடரும் மர்மங்கள் : பாடசாலையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!
47 view
பாடசாலையில் கல்வி பயின்று வரும் 12ம் வகுப்பு மாணவி பாடசாலையின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் மாணவியின் உடம்பில் காயங்கள் மற்றும் கீரல்கள் ரத்தக்கரைகள் இருந்தததையடுத்து கொந்தளித்த பொதுமக்கள் பள்ளியின் பேருந்துகள் மற்றும் வளாகங்களை அடித்து தீ வைத்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த மாணவி கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி என தெரியவந்துள்ளது. குறித்த மாணவி கடந்த 13ம் திகதி உயிரிழந்துள்ள நிலையில் விசாரணையின்போது மாணவி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பிரேத பரிசோதனையின் முடிவுகளில் மாணவியின் உடையில் காயங்கள் இருந்ததாகவும் கீரல்கள் உடலில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால் பெற்றோர் இது தற்கொலை அல்ல கொலை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆர்ப்பாட்டம் பின் வன்முறையாக…
The post மாணவியின் மரணத்தில் தொடரும் மர்மங்கள் : பாடசாலையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவியின் மரணத்தில் தொடரும் மர்மங்கள் : பாடசாலையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
