தமிழர்களின் கோரிக்கை ஆவணம்: இடைக்கால அரசாங்கம், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடம் கையளிக்க தீர்மானம்
41 view
கொழும்பு. ஜுலை 18 தமிழ் மக்களின் அபிலாஷைகள் மையப்படுத்திய கோரிக்கை ஆவணமொன்றை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும்,காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடத்திலும் கையளிப்பதற்கு ஆறு தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன. குறித்த கோரிக்கை ஆணவனத்தின் இறுதி வரைவானது இறுதி செய்யப்படவுள்ளதோடு, இந்த செயற்பாட்டில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள ஆறு கட்சிகளின் தலைவர்களான, நீதியரசர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் மெய்நிகர் வழியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். இதில் புளொட் தலைவர் சித்தார்த்தன் பயணம் காரணமாக , பங்கேற்றிருக்கவில்லை. எனினும் குறித்த தீர்மானத்திற்கு அவர் தரப்பிலும் ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக, குறித்த கட்சிகளை ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டவரும், ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுரேந்திரன் விடுத்துள்ள ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள ஆறு…
The post தமிழர்களின் கோரிக்கை ஆவணம்: இடைக்கால அரசாங்கம், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடம் கையளிக்க தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களின் கோரிக்கை ஆவணம்: இடைக்கால அரசாங்கம், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடம் கையளிக்க தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
