நீதிமன்ற கட்டளையை பொலிஸார் மீறினால் மீண்டும் நீதிமன்றிற்கு செல்வோம்! து.ரவிகரன்
6 view
நீதிமன்ற கட்டளையை பொலிஸார் மீறுபவர்களாக இருந்தால் நிச்சயமாக நாங்கள் மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லும் நோக்கத்தில் இருக்கின்றோம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு குமுழமுனை குருந்தூர் மலை விடயம் தொடர்பில் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழர் பாரம்பரியமும், மிகவும் தொன்மையான ஆதிசிவன் ஐயனார் கோயில் காலங்காலமாக சைவ தமிழர்களால் பூஜை வழிபாடுகளை செய்து வந்த தலம். 2018.09.06 ஆம் திகதி குருந்தூர் மலை தொடர்பில் போடப்பட்ட வழக்கின் கட்டளையின்படி புதிய கட்டுமானங்கள் அமைக்கக் கூடாது என்ற கட்டளையோடு பல கட்டளைகள் அதனுள் அடங்கும். ஆனால் 2022.06.12 ஆம் திகதி மிக பெரியளவில் புத்தர் சிலை அமைக்கும் நோக்கத்தில் பாரிய பௌத்த மத திணிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலயத்தில் மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அன்றைய தினம் மக்களும், மக்கள் பிரநிதிகளினதும் பாரிய எதிர்ப்பினால் பௌத்த மத திணிப்பு முயற்சிகள் நிறுத்தப்பட்டிருந்தன. மீண்டும் நாம்…
The post நீதிமன்ற கட்டளையை பொலிஸார் மீறினால் மீண்டும் நீதிமன்றிற்கு செல்வோம்! து.ரவிகரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீதிமன்ற கட்டளையை பொலிஸார் மீறினால் மீண்டும் நீதிமன்றிற்கு செல்வோம்! து.ரவிகரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
