முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 24 ஓட்டங்கள்

37 view
கொழும்பு,ஜுலை 16 இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நான் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 24 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, போட்டியின் முதலாவது நாளான இன்று இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடி 222 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அணிசார்பில் அதிகபடியாக தினேஷ் சந்திமால் 76 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். தினேஷ் சந்திமால் டெஸ்ட் போட்டிகளில் பெற்ற 22ஆவது அரைச்சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 115 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள், ஒரு 6 ஓட்டம் அடங்களாக இவ்வாறு அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். அத்துடன், ஓசத பெர்னாண்டோ 35 ஓட்டங்களையும், மகீஷ் தீக்ஷன 38 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இலங்கை அணியின் ஏனைய…
The post முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 24 ஓட்டங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース