ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை
26 view
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அவரது விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர் நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. எதிர்க்கட்சிகள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அவருடைய நாடாளுமன்ற உறுப்புரிமையும் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
The post ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
