வங்காலை கிராம மக்கள் சமையல் எரிவாயு கோரி வீதியை மறித்து போராட்டம்
5 view
நானாட்டான் – வங்காலை கிராம மக்கள் இன்றைய தினம் சனிக்கிழமை(16) காலை சமையல் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுமார் 900 லிட்ரோ சமையல் எரிவாயு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் இன்றைய தினம் (16) வங்காலை கிராமத்திற்கு விநியோகிக்கப் படாமல் வேறு கிராமங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் வங்காலை கிராமத்தில் உள்ள 4 கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் வங்காலை பிரதான வீதியை மறித்து எரிவாயு சிலிண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வங்காலை பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினர். இதன் போது கிராம மக்கள் தமது பிரச்சினைகளை பொலிஸ் அதிகாரியிடம் தெரிவித்ததோடு,தமது கிராமம் சமையல் எரிவாயு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர். இந்த…
The post வங்காலை கிராம மக்கள் சமையல் எரிவாயு கோரி வீதியை மறித்து போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வங்காலை கிராம மக்கள் சமையல் எரிவாயு கோரி வீதியை மறித்து போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
