கனடா லவால் மாநகரசபையில் தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்
13 view
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என கியூபெக் மாகாணத்தின் லவால் மாநகரசபை தீர்மானம் நிறைவேறியுள்ளது. லவால் மாநகர சபையின் அமர்வு புதன் கிழமை நடைபெற்ற போது உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. கியூபெக் மாகாணத்தின் லவால் மாநகர சபையில் தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்துக்கான முதலாவது முன்மொழிவு கடந்த ஜூன் 7ம் திகதியன்று சபையில் இடம் பெற்று, தீர்மானம் தொடர்பான தகவல் அடங்கிய நகல் மாநகர சபையின் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்பட்டது. அன்றைய அமர்வின்போது இனப்படுகொலை இடம்பெற்றமை தொடர்பாக கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் லவால் மாநகர சபையில் வரவேற்கப்பட்டது. அதனை தொடர்ந்து லவால் மாநகர சபையின் எதிர்க்கட்சியான அக்சன் லவால் சார்பில் ”சொமெடி” உறுப்பினர் அக்லியா ரெப்ளக்கிஸ் அவர்கள் தமிழ் இனப்படுகொலை தொடர்பான சிறப்பு அறிக்கையினை வாசித்தார். இலங்கை அரசால் தொடர்ச்சியாக அநியாயமாக ”தமிழ் இனப்படுகொலை” செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு லவால் மாநகர சபையின்…
The post கனடா லவால் மாநகரசபையில் தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடா லவால் மாநகரசபையில் தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
