விளம்பர பலகை விவகாரம்: வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

15 view
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அனுமதியின்றி காட்சிப்படுத்திய விளம்பரப்பலகையினை வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றியமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கில், வீதி அபிவிருத்தி அதிகார சபை இணக்கத்துடன் வழக்கினை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக மன்றில் தெரிவித்திருந்த போதும் அதற்கான வாக்குமூலத்தை தெடர்ச்சியாக வழங்காத நிலையில் முறைப்பாட்டாளரான வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிப்பு (நோட்டிஸ்) அனுப்புமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று புதன் கிழமை (14) இடம்பெற்ற வழக்கு தவணையின்போதே மல்லாகம் நீதிமன்றத்தினால் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உள்ளுராட்சி மன்றமான பிரதேச சபைக்குச் சொந்தமான அச்செழு அம்மன் வீதியை மத்திய அரசாங்கத்தின் நிறுவனமான வீதி அபிவிருத்தி அதிகார சபை அனுமதிகள் பெறப்படாது புனரமைக்க நடவடிக்கை எடுத்ததுடன் சபையின் அனுமதியின்றி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகளின் புகைப்படத்துடன் விளம்பரப்பலகையினையும் நாட்டியிருந்தது. அவ் விளம்பரப்பலகையினை தனதோ சபையினதோ அனுமதியின்றி நாட்டியமையைக் காரணம் காட்டி வலிகாமம் கிழக்குப்…
The post விளம்பர பலகை விவகாரம்: வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース