இனிமேலும் இது கோட்டாவின் சொத்து அல்ல! (படங்கள் இணைப்பு)

6 view
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 9ஆம் திகதியன்று போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்த ஜனாதிபதி மாளிகை உட்பட அரச கட்டடங்கள் அனைத்தும் பாதுகாப்புப் படையினரிடம் இன்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டன. எனினும், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் – காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் அரசுக்கு எதிரான மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அமைதியை ஏற்படுத்தி புதிய அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், கைப்பற்றப்பட்ட அரச கட்டடங்களை மீளக் கையளிக்குமாறு காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேற்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்துத் தம்மால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் மீள ஒப்படைப்பதற்குக் காலிமுகத்திடல் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் குழுவினர் இணக்கம் தெரிவித்திருந்தனர். இன்று காலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அவர்கள் அதற்கான இணக்கத்தை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், தம்மால் கைப்பற்றப்பட்ட…
The post இனிமேலும் இது கோட்டாவின் சொத்து அல்ல! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース