கோட்டா இப்போது எங்கே இருக்கின்றார் இரகசிய தகவல் வெளியானது!
19 view
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் சிங்கப்பூர் செல்லவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இன்னமும் மாலைதீவில் தங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. பாதுகாப்பாக செல்லும் ஏற்பாடுகள் தாமதமடைந்ததால், சிங்கப்பூர் செல்லும் SQ437 என்ற விமானத்தை அவர் தவறவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மாலைதீவு அதிகாரிகள் இமிக்ரேஷனுக்காக இவரின் அறைக்கு செல்ல மறுத்துள்ளதால், அவர் மக்களோடு மக்களாக லைனில் சிங்கப்பூர் இமிக்ரேஷனுக்கு நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என இப்போது தனி ஜெட் விமானமொன்று வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post கோட்டா இப்போது எங்கே இருக்கின்றார் இரகசிய தகவல் வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டா இப்போது எங்கே இருக்கின்றார் இரகசிய தகவல் வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
