துப்பாக்கி, தோட்டாக்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்
5 view
கொழும்பு, ஜுலை 14 இராணுவ அதிகாரி ஒருவரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாராளுமன்றம் அருகே, பத்தரமுல்லை -பொல்துவ சந்தியில் இராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நேற்று (13) மோதல் ஏற்பட்டது. இதன்போதே, மேற்படி துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post துப்பாக்கி, தோட்டாக்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துப்பாக்கி, தோட்டாக்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
