சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!
30 view
புத்தளம் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வந்த தொடர் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் மூன்று நாட்களின் பின்னர் இன்று (13) புதன்கிழமையுடன் கைவிடப்பட்டுள்ளது. கடந்த (06) பொதுநிருவாக அமைச்சு வெளியிட்ட சுற்றுநிருபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கு தேவையான எரிபொருள் வழங்க கோரியுமே சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்படி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்து வரும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எரிபொருள் இன்றி சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், இதனால் அவர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரி கடந்த 6 ஆம் திகதி பொதுநிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார். இதற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, நடு முழுவதும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடந்த திங்கட்கிழமை (11)…
The post சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
