மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத 22! – விமர்சிக்கும் சட்டத்தரணிகள் சங்கம்
22 view
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம், பொதுமக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று அறிவித்துள்ளது. இந்த சட்டமூலம், முறையான அரசியல் சீர்திருத்தத்தில் ஈடுபடும் நோக்கத்தை நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியேயும் உருவாக்காது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கருதுவதாக, சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது உருவாக்கப்பட்டுள்ள உத்தேச 22வது திருத்தம், அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்படும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சுதந்திரத்திற்கு போதுமான உத்தரவாதத்தை வழங்கவில்லை. அரசியலமைப்பு பேரவையில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்கள் மூவரும் இருப்பார்கள். 22 வது திருத்தத்தின்படி, அரசியலமைப்பு பேரவைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களான மூவரை நியமிப்பதற்கு, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரம் அவசியமாகும். இதன்படி, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையினரால் அரசியலமைப்பு பேரவையை கட்டுப்படுத்த முடியும். எனவே இது அரசியலமைப்பு பேரவையின் திறனை மோசமாக பாதிக்கும் எனவும் பீரிஸ் தெரிவித்தார். அரசியலமைப்பு பேரவை, சுயாதீனமாக…
The post மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத 22! – விமர்சிக்கும் சட்டத்தரணிகள் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத 22! – விமர்சிக்கும் சட்டத்தரணிகள் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
