நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயலும் சரத் வீரசேகர– சிவஞானம் கண்டனம்!

14 view
சரத் வீரசேகரவின் கூற்று நாடாளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் தவறாக வழிநடாத்தும் உண்மைக்கு புறம்பான ஒன்றாகும் என வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”கடந்த 21.06.2022 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, “அண்மையில் யாழ்ப்பாணம் நாகவிகாரையில் புத்த பெருமான் சிலையை நிறுவதற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.” என்று கூறியதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. யாழ்ப்பாண நகரத்தின் சிரேஷ்ட குடியிருப்பாளர் என்ற வகையில் மட்டுமன்றி இந்த நகரத்தின் நிர்வாகத்திலும் விவகாரங்களிலும் கடந்த 60 வருடங்களாக தொடர்புடையவன் என்ற வகையில் இந்தக் கூற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன். இப்படி எந்த நிகழ்வும் நாகவிகாரையில் நடந்ததாக எவருக்கும் தெரியாது. இவரின் கூற்று நாடாளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் தவறாக வழிநடாத்தும் உண்மைக்கு புறம்பான ஒன்றாகும். இவரும் இவரைப் போன்றவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பல…
The post நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயலும் சரத் வீரசேகர– சிவஞானம் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース