ஹட்டனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சமையல் எரிவாயு மீட்பு!
16 view
கொழும்பில் கறுப்பு சந்தைக்கு அனுப்புவதற்காக ஹட்டனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒரு தொகை சமையல் எரிவாயுவை பொலிஸாரும், நுகர்வோர் அதிகார சபையினரும் இணைந்து இன்று (வியாழக்கிழமை) மீட்டுள்ளனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸாரும், நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளும் அறிவித்துள்ளனர். ஹட்டன் பஸ் தரப்பிடத்துக்கு பின்பகுதியில் உள்ள ‘கொரியர்’ சேவை வழங்கும் நிலையமொன்றிலிருந்தே இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. 2.5 கிலோ எடையுடைய 8 லாப் பேஸ் சிலிண்டர்களும், 12.5 கிலோ எடையுடைய 12 லாப் கேஸ் சிலிண்டர்களும் மீட்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ” கொழும்புக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கும் வியாபாரம் இடம்பெற்று வந்துள்ளது. இது தற்போது அம்பலமாகியுள்ளது. ” – என்று பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். குறித்த கொரியர் சேவை வழங்கும் நிறுவனத்துக்கு நேற்று வெற்று சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, இந்நிலையில் இன்று எரிவாயு நிரப்பட்ட…
The post ஹட்டனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சமையல் எரிவாயு மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹட்டனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சமையல் எரிவாயு மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
