நாட்டில் பிள்ளைகளை சுமந்தவாறு யாசகம்?
44 view
சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும் என திருகோணமலை மாவட்ட அரச அதிபருமல மற்றும் மாவட்ட செயலாளருமான B.எச்.என். ஜயவிக்ரம வேண்டிக் கொண்டார். மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் கூட்டம் இன்று (22) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,பிரதேச செயலக ரீதியாக சிறுவர்களது நலன்கள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படல் வேண்டும். சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படல் தொடர்பான சம்பவங்கள் மாவட்டத்தில் பதிவாகின்றன. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை முற்றாக இல்லாதொழி க்கும் வகையில் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்படல் இன்றியமையாதது. சிறுவர்கள் வாழ்வதற்குரிய நல்ல ஓர் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். அதன் மூலம் அவர்களை நாட்டுக்கு வேண்டிய பிரஜைகளாக மாற்றியமைக்க முடியும் – என்றார். திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிட்ட 430 மாணவர்கள் காணப்படுகின்றனர். இவர்களை மீளப் பாடசாலைகளில் இணைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு…
The post நாட்டில் பிள்ளைகளை சுமந்தவாறு யாசகம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் பிள்ளைகளை சுமந்தவாறு யாசகம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
