தமிழகத்தில் இருந்து 2 வது கட்ட நிவாரணப் பொருட்கள்
29 view
கொழும்பு, ஜூன் 22: தமிழகம் தூத்துக் குடியில் இருந்து 2 ஆவது கட்டமாக இலங்கைக்கான நிவாரணப் பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பிவைக்க சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த பிரேரணை அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்தியா ரூபாவில் 80 கோடி மதிப்பிலான 40,000 மெட்ரிக் டன் அரிசி, ரூ28 கோடி மதிப்பிலான 50 மெட்ரிக் டன் பால்மா, ரூ.28 கோடி மதிப்பிலான137 வகையான மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி சென்னைதுறைமுகத்திலிருந்து முதற்கட்டமாக கடந்த மாதம் 18 ஆம் திகதி கப்பல் மூலம் 9,500 டன் அரிசி, 200 டன் பால் மா, 30 டன்அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு அனுப்பப்பட்ட பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக நாட்டில் சிரமத்தை எதிர்நோக்கும்…
The post தமிழகத்தில் இருந்து 2 வது கட்ட நிவாரணப் பொருட்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழகத்தில் இருந்து 2 வது கட்ட நிவாரணப் பொருட்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
