இ.போ.ச பேருந்து ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையே முறுகல்: டிப்போ வாயிலை மூடி ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு)
5 view
இ.போ.ச பேருந்து ஊழியர்கள் பெற்றோலை பெறுவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரி யாழ். சாலை வாயிலை மூடி ஆர்பபாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ் சாலையில் தனியார் பேருந்துகளுக்கான டீசல் விநியோகம் இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் தனியார் பேருந்துகளுக்கு டீசலை வழங்க அனுமதிக்க முடியாது என தெரிவித்து மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இ.போ.ச பேருந்து ஊழியர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இ.போ.ச சாரதிகள் நடத்துநர்கள் பலர் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் இல்லாததால், பலர் பணிக்குச் செல்லாதிருப்பதாகவும், அது விடுமுறையாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. யாழ் சாலையில் தனியார் பேருந்துகளுக்கு டீசல் விநியோகம் இடம்பெற்று வருகிறது. எமது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை குறித்த செயற்பாட்டையும் இடைநிறுத்தவுள்ளோம். என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சமூகம் மீடியாவுக்கு தெரிவிக்கையில், இ.போ.ச. நிரப்பு நிலையத்தில் எங்களுக்கு எரிபொருள் பெறுவதற்காக அனுமதி வழங்கப்பட்டது.…
The post இ.போ.ச பேருந்து ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையே முறுகல்: டிப்போ வாயிலை மூடி ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இ.போ.ச பேருந்து ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையே முறுகல்: டிப்போ வாயிலை மூடி ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
