உலக புகழ்பெற்ற ‘ஜம்போ’ மிதக்கும் உணவகம் கடலில் மூழ்கியது!
13 view
உலக புகழ்பெற்ற ஹொங்கொங் சுற்றுலாத்தலமாக விளங்கிய ‘ஜம்போ’ மிதக்கும் உணவகம், தென் சீனக் கடலில் மூழ்கியதாக அதன் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாராசெல் தீவுகளுக்கு அருகில் ‘ஜம்போ’ மிதக்கும் உணவகம், ஞாயிற்றுக்கிழமை பாதகமான நிலைமைகளை எதிர்கொண்ட பிறகு மூழ்கியதாக அபெர்டீன் ரெஸ்டாரன்ட் எண்டர்பிரைசஸ் ஒரு அறிக்கையில் அறிவித்தது. படகு 1,000 மீட்டருக்கும் (3,280 அடி) அடியில் மூழ்கியதால் மீட்புப் பணி மிகவும் கடினமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அபெர்டீன் ரெஸ்டாரன்ட் எண்டர்பிரைசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விபத்தால் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். மேலும் விபரங்களை சேகரிக்கும் முயற்சி செய்கின்றோம். பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை’ என தெரிவித்துள்ளது. ஹொங்கொங்கின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று சின்னங்களில் ஒன்றான ‘ஜம்போ’ மிதக்கும் உணவகம், மூழ்கியதையடுத்து இதன் வாடிக்கையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பிரியாவிடை செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர். பயணத்திற்கு முன், மிதக்கும் உணவகத்தை ஆய்வு செய்யவும், கப்பலில் ஹோர்டிங்குகளை நிறுவவும் கடல் பொறியியலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து…
The post உலக புகழ்பெற்ற ‘ஜம்போ’ மிதக்கும் உணவகம் கடலில் மூழ்கியது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலக புகழ்பெற்ற ‘ஜம்போ’ மிதக்கும் உணவகம் கடலில் மூழ்கியது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
