பகிஷ்கரிப்பில் இறங்கிய ஆசிரியர்களால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)
12 view
புத்தளத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று நண்பகல் முதல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். குறித்த மதீப்பீட்டுப் பணிகளுக்காக வருகை தரும் ஆசிரியர்கள் எரிபொருள் இன்றி பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதால் தமக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். புத்தளம் சென். அன்றூஸ் மஹா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (21) முதல் ஆரம்பிக்கபடவிருந்த நிலையில் மேற்படி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.அத்துடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு மத்திய நிலையமான புத்தளம் சென். அன்றூஸ் மஹா வித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த ஆசிரியர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இலங்கையில் கொரோனா அதனைத்தொடர்ந்து பொருளாதார நெருக்கடி என்று மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், க.பொ.த சாதாரன தர மாணவர்களின் எதிர்காலத்தையும் இதன்மூலம் கேள்விக்கு உட்படுத்த வேண்டாம் எனவும் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர். மேற்படி,…
The post பகிஷ்கரிப்பில் இறங்கிய ஆசிரியர்களால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பகிஷ்கரிப்பில் இறங்கிய ஆசிரியர்களால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
