வெளிநாட்டு உதவித் திட்டங்கள் மறுபரிசீலனை-கிழக்கு ஆளுனர் அறிவிப்பு!

4 view
இலங்கையின் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையே நாட்டின் டொலர் வருமானத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். இந்நிலைமையை நாம் அனைவரும் புரிந்துகொண்டு நாட்டை மீளமைக்க கூடிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். மட்டக்களப்பு ஊரியாங்கட்டு பிரதேசத்தில் நேற்று (20) திங்கட்கிழமை மாலை நடைபெற்ற விவசாயிகளுக்கு இலவச விவசாய  பொதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், “எதிர்காலத்தில் கிழக்கு மாகாண விவசாயிகள் நாட்டிற்குத் தன்னிறைவான உணவை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான உதவிகளை வழங்கும் வகையில் உரம், விதை உற்பத்தி உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வெள்ளரி மற்றும் பழங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வாகரை மக்கள் ஏற்கனவே டொலர்களை சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களை நாம் மேலும் ஊக்குவிக்க வேண்டும்.…
The post வெளிநாட்டு உதவித் திட்டங்கள் மறுபரிசீலனை-கிழக்கு ஆளுனர் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース