இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்
15 view
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் பீடி இலைகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை அவ்வப்போது கியூ பிரிவு பொலிஸார், கடலோர பாதுகாப்பு பொலிஸார் மடக்கி பிடித்து வருகின்றனர். அதேபோன்று போதை பொருட்கள் கடத்தலும் நடந்து வருகிறது. இதனால் மாவட்ட மரைன் பொலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி மற்றும் பொலிஸார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொலிசை பார்த்ததும் கடற்கரையில் இருந்த ஒரு படகு வேகமாக…
The post இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
