யாழ் மாவட்ட மக்களுக்கு பெற்றோல் விநியோகத்திற்கு ஏற்பாடு
14 view
யாழ்ப்பாணம்,ஜுன் 20 யாழ். மாவட்ட மக்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பாக இன்று (20) இன்று காலை 10.30 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அதன்படி, யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தத்தம் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் செயற்படுவதுடன் நாளாந்த கையிருப்பு தகவல்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் தினமும் காலை இரவு என இரண்டு தடவைகள் நேரடியாக சேகரிக்கப்படும். இதற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பிரதேச செயலாளர் நியமிப்பார். பிரதேச செயலகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகத்தை இடைநிறுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணங்கியுள்ளது.வாகனங்களுக்கான பங்கீட்டு அட்டை முறை ஜூலை 1ம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி மக்கள் தமது வதிவிட பிரதேசத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை தெரிவு செய்து அங்கு மாத்திரமே எரிபொருளை பெறும்வகையில் பொறிமுறை உருவாக்கப்படும். அரச உத்தியோகத்தர்கள் தமக்கான எரிபொருள் நிலையத்தை தெரிவு…
The post யாழ் மாவட்ட மக்களுக்கு பெற்றோல் விநியோகத்திற்கு ஏற்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் மாவட்ட மக்களுக்கு பெற்றோல் விநியோகத்திற்கு ஏற்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
