வெயிலில் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள்
34 view
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மட்டுப்படுத்த நிலையில் எரிபொருள் வழங்கப்படுவதனால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். சுமார் 2 முதல் 5 கிலோமீட்டர் வரை நிரையாக தத்தமது வாகனங்கள் உடன் அதிகாலை முதல் மாலை இரவு என காத்திருந்து எரிபொருளை பெற்றுச்செல்வதுடன் மற்றுமொரு தொகுதியினர் எரிபொருள் தீர்வதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதை அவதானிக்க முடிகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டத்திற்கான எரிபொருட்கள் சுழற்சி முறையில் வருவதுடன் இணைய வழியூடாக மக்கள் அறிந்து குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்தை வந்தடைகின்றனர். அத்துடன் குறித்த எரிபொருள் நிலையங்களில் எவ்வித ஒழுங்கமைப்புகள் இன்றி மக்கள் அதிகளவாக குவிந்து காணப்படுவதனால் எரிபொருள் விநியோகம் சீரற்ற முறையில் வழங்கப்படுகின்றது. இதனால் சில இடங்களில் பொதுமக்கள் எரிபொருள் ஊழியர்களிடையே முரண்பாடுகள் உருவாகின்றன. இதனை தொடர்ந்து இராணுவம் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய அவ்விடத்தில் இருந்து பொதுமக்கள் அகன்று செல்வதை தினமும் காண முடிகின்றது. மேலும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது…
The post வெயிலில் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெயிலில் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
