உணர்ச்சியற்ற ஜடங்களாக உள்ள கோட்டா அரசை விரட்டியடிக்க மக்கள் ஓரணியில் திரள வேண்டும்! ஜே.வி.பி.
4 view
காலிமுகத்திடலில் கோட்டாகோகம போராட்டத்தை பாதுகாப்போம் எனக் கூறிய பிரதமர் இன்று அதனை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். சமகால நிலைமை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்க பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வரவில்லை. பிரச்சினையை வளர்ப்பதற்காகவே வந்துள்ளார். வரிசை யுகமே தற்போது காணப்படுகிறது. உரம் இல்லாததால் விவசாயத்துறை முழுமையாகசெயலிழந்துள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக தட்டுப்பாட்டினாலும் மக்கள் பட்டினிச் சாவினை எதிர்கொள்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் கோட்டாகோகம போராட்டத்தை பாதுகாப்போம் எனக் கூறிய பிரதமர் இன்று அதனை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வு வழங்காமல் மக்களின் பாதுகாவலன் என்ற சொல்லிக்கொண்டு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ராஜபக்ஷவின் பாதுகாவலனாக மாறியுள்ளார். எரிபொருளினை பெறுவதற்காக…
The post உணர்ச்சியற்ற ஜடங்களாக உள்ள கோட்டா அரசை விரட்டியடிக்க மக்கள் ஓரணியில் திரள வேண்டும்! ஜே.வி.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உணர்ச்சியற்ற ஜடங்களாக உள்ள கோட்டா அரசை விரட்டியடிக்க மக்கள் ஓரணியில் திரள வேண்டும்! ஜே.வி.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
