4ஆவது ஒருநாள் போட்டி: நிஸங்க- குசல் மெண்டிஸின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸியை வீழ்த்திய இலங்கை அணி!
12 view
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இலங்கை கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது. கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ட்ராவிஸ் ஹெட் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களையும் ஆரோன் பின்ஞ் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜெப்ரி வெண்டர்சே 3 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர, வெல்லாலகே மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 292 என்ற வெற்றி இலக்கை நோக்கி…
The post 4ஆவது ஒருநாள் போட்டி: நிஸங்க- குசல் மெண்டிஸின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸியை வீழ்த்திய இலங்கை அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 4ஆவது ஒருநாள் போட்டி: நிஸங்க- குசல் மெண்டிஸின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸியை வீழ்த்திய இலங்கை அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
