கோட்டா கோகமவுடன் பேசுவது – நிலாந்தன்.
38 view
“மருத்துவர் ஷாபி சிகாப்தீனை அவருடைய மத அடையாளம் காரணமாக துன்புறுத்தியதில் ஒரு பங்கை வகித்த அதே மருத்துவ கட்டமைப்புக்கு தனது சம்பள நிலுவையை திரும்பிக் கொடுத்ததன் மூலம் எல்லாவற்றுக்குள்ளும் அதிகம் அன்பான ஒரு சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறார்.இன்றைய பொசன் போயா நாளில் அவர் எங்களுக்கு பகவான் புத்தரின் செய்தியை அனுப்பியிருக்கிறார்”….. இவ்வாறு ருவிற்றரில் பதிவிட்டிருப்பவர் பேராசிரியர் சரோஜ் ஜெயசிங்க.கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் சேவையாற்றி ஓய்வுபெற்ற ஒரு மருத்துவ நிபுணர். மருத்துவர் ஷாபி சிகாப்தீன் குருநாகல் போதனா மருத்துவமனையில் மகப்பேற்று நிபுணராக இருந்தவர். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோத கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஷாபி சிஹாப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.அவர் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்ததாகவும். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.எனினும் குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தால் ஷாபி விடுவிக்கப்பட்டார். அவ்வாறு விடுவிக்கப்பட்ட பின் அவருக்கு வழங்கப்பட்ட சம்பள நிலுவைத் தொகையான 2.67 மில்லியன் ரூபாயை அவர்…
The post கோட்டா கோகமவுடன் பேசுவது – நிலாந்தன். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டா கோகமவுடன் பேசுவது – நிலாந்தன். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
