முகமூடி அணிந்து செயற்படும் அரசு; இவர்களை நம்பி சர்வதேசம் எதை செய்யப்போகிறது? அனந்தி சசிதரன் கேள்வி

14 view
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பொய்யான தகவல்களை அறிக்கை வழங்கி சர்வதேசத்திற்கு முகமூடி அணிந்து செயற்படுகிறார் இதனை கண்டிக்கும் முகமாக இந்த போராட்டத்தினை நடாத்தியிருந்தோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறியிருந்தார் இன்றைய தினம் யாழில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையின் போதே இவ்வாறு கூறியிருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 83 சதவீதமான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும், 92 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டதாகவும், புலம்பெயர் தேசங்களில் வாழுகின்ற தமிழர்களுடைய கறுப்புபட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்குள்இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து இருப்பதனால் ஐ.நாவுடைய பொறிமுறை பெரிய தடையாக இருப்பதனால் அதனை நீக்குமாறு கோரிக்கையினை விடுத்திருந்தார். பொய்யான கணக்குகளை காட்டியிருக்கிறார். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடக்கிலும் கிழக்கிலும் உள்ள வலிந்துகாணாமல் ஆக்கப்படட உறவுகள் பதிவு செய்யப்பட்டவர்கள் இருக்கின்ற பொழுது இவர் யாருடன் பேச்சுவார்த்தையினை நடாத்தி இருக்கிறார்? சர்வதேசத்திற்கு பீரிஸ் முகமூடி…
The post முகமூடி அணிந்து செயற்படும் அரசு; இவர்களை நம்பி சர்வதேசம் எதை செய்யப்போகிறது? அனந்தி சசிதரன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース