“சிறந்த பார்மசி நடைமுறைகள்” தொடர்பில் செயலமர்வு : கல்முனை பிராந்திய சுகாதார உயிரியல் வைத்திய பிரிவின் அபிவிருத்திக்கு பார்மசி உரிமையாளர்கள் சங்கத்தினால் நன்கொடை வழங்கி வைப்பு
17 view
நூருல் ஹுதா உமர் “சிறந்த பார்மசி நடைமுறைகள்” தொடர்பில் கல்முனை பிராந்திய தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் இன்று (18) சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நாட்டில் தலைதூக்கும் போதைப்பொருள் கட்டுப்பாடு, நாட்டில் இப்போதைய நிலையில் உள்ள மருந்து தட்டுப்பாடுகள், பொருளாதார நெருக்கடியில் சுகாதார சேவைகளை கையாளுவது தொடர்பில் ஆழமாக ஆராயப்பட்ட இந்த செயலமர்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மருந்தக உரிமையாளர்களுக்கு விளக்கமளித்தார். இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உயிரியல் வைத்திய பிரிவின் அபிவிருத்தியின் பொருட்டு கல்முனை பிராந்திய தனியார் பார்மசி உரிமையாளர்கள் சங்கத்தினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையிலான பணிமனை உத்தியோகத்தர்களிடம் நன்கொடையாக ஒருதொகை பணத்திற்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டதுடன் சுகாதார சேவைகள்…
The post “சிறந்த பார்மசி நடைமுறைகள்” தொடர்பில் செயலமர்வு : கல்முனை பிராந்திய சுகாதார உயிரியல் வைத்திய பிரிவின் அபிவிருத்திக்கு பார்மசி உரிமையாளர்கள் சங்கத்தினால் நன்கொடை வழங்கி வைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “சிறந்த பார்மசி நடைமுறைகள்” தொடர்பில் செயலமர்வு : கல்முனை பிராந்திய சுகாதார உயிரியல் வைத்திய பிரிவின் அபிவிருத்திக்கு பார்மசி உரிமையாளர்கள் சங்கத்தினால் நன்கொடை வழங்கி வைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
