26 ஆண்டுகளின் பின்னர் தாயை காண வந்த தமிழ் அரசியல் கைதி; அனைவரின் மனதையும் நெருக்கிய வாழ்க்கைச் சம்பவம்! (படங்கள் இணைப்பு)
47 view
26 வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் தனது தாயின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்வதற்காக சற்றுமுன் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தந்தையின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்ள அழைத்துவரப்பட்ட இவர் இன்று தாயின் இறுதிக்கிரிகைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இச் சம்பவம் அனைவரின் மனதையும் நெருடலுக்குள்ளாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் , திருநெல்வேலியில் வசித்து வந்த குறித்த அரிசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் – வாகீஸ்வரி (கண்ணாடி அம்மா) கடந்த (15) புதன் கிழமை இரவு 7.00 மணியளவில் காலமானார். மண்ணறைக்குப் போவதற்குள் தன் பிள்ளைக்கு ஒரு பிடி சோறூட்ட வழிகாட்டையா என நல்லூரானிடம் வேண்டிக்கொண்டிருந்த தாய், இதுவரை தன் பிள்ளையின் திருமுகம் காணாமலே விண்ணுலகை ஏகிவிட்டார் என உறவினர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த 1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தமிழ் அரசியல் கைதியாக கடந்த 26 ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் இலங்கை மத்திய வங்கி குண்டு…
The post 26 ஆண்டுகளின் பின்னர் தாயை காண வந்த தமிழ் அரசியல் கைதி; அனைவரின் மனதையும் நெருக்கிய வாழ்க்கைச் சம்பவம்! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 26 ஆண்டுகளின் பின்னர் தாயை காண வந்த தமிழ் அரசியல் கைதி; அனைவரின் மனதையும் நெருக்கிய வாழ்க்கைச் சம்பவம்! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
