நாடு இறைச்சிக்காக சண்டைபோடும் விலங்குகள் போல உருவெடுக்கும்! ரவி குமுதேஷ
39 view
இறைச்சிக்காக காட்டு விலங்குகள் சண்டையிட்டுக்கொள்வதை போன்ற ஒரு நிலைமை நாட்டில் உருவாவதை தடுக்க முடியாது என்று சுகாதார தொழில்வல்லுனர்களின் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(18)ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் நாடு பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. விசேடமாக நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். நாட்டை நிர்வகிக்க முடியாது என்பதை அரசாங்கம் தற்போதைய நிலையில் உறுதிப்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் இவ்விடயமானது மேலும் உறுதிப்படுத்தப்படும். தற்போதைய நிலையில் அரச சேவைக்கு இரண்டு வார விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கூடாக அரச சேவையினூடாக பெற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போகும். அவ்வாறு பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்புகளும் இல்லை. சில சந்தர்ப்பங்களில் நாடு முடக்கத்துக்கு செல்லலாம். இவ்வாறான ஒரு நெருக்கடி நிலைமை காணப்படும்போது நாட்டை நிர்வகிப்பவர்கள் எவ்வாறு நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள் என்ற விடயத்தை நாம் எமது மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.…
The post நாடு இறைச்சிக்காக சண்டைபோடும் விலங்குகள் போல உருவெடுக்கும்! ரவி குமுதேஷ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு இறைச்சிக்காக சண்டைபோடும் விலங்குகள் போல உருவெடுக்கும்! ரவி குமுதேஷ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
