தாயார் வாகீஸ்வரியின் மறைவிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் துயர் பகிர்வு
40 view
தமிழ் அரசியல் கைதி பார்த்தீபனின் அன்புத்தாய் விக்னேஸ்வரநாதன் வாகீஸ்வரியின் மறைவிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் துயர் பகிந்துள்ளது. மேலும், 1996ம் ஆண்டு முதல் 26 வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக வாடிக்கொண்டிருக்கும் விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் அன்புத்தாய் விக்னேஸ்வரநாதன் வாகீஸ்வரி, 15.06.2022 அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைகின்றோம். தாயார் வாகீஸ்வரியின் மறைவிற்கு எமது ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளவதுடன் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் பார்த்தீபனுடனும் குடும்பத்தினர் அனைவருடனும் துயர் பகிர்ந்து கொள்கின்றோம். தேசத்தின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து சிறைப்படுத்தப்பட்ட தனது அன்பு மகன் வீடு திரும்புவான் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடி வந்த இத்தாயானவர் தனது மகனுக்கு தனது கையால் ஒரு வேளையாவது கூட உணவளிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடனேயே உயிர் பிரிந்தார் என்பது முழு தமிழினத்தையும் ஆழ்த்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நீதியற்ற சிங்கள நீதி துறையினாலேயே குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட சிங்கள படுகொலையாளிகளை…
The post தாயார் வாகீஸ்வரியின் மறைவிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் துயர் பகிர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாயார் வாகீஸ்வரியின் மறைவிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் துயர் பகிர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
