ராஜபக்ஷக்கள் ‘அவுட்’டாவதை தடுத்துக்காத்தவர் ரணில்தான்!சுமந்திரன் சரமாரிக் குற்றச்சாட்டு
48 view
நாட்டைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கடித்த ராஜபக்சக்களின் தர்பார் முற்றாக ‘அவுட்’ ஆகும் நிலையில் இருந்தது. அதற்குள், அறிவற்ற முறையில் இடையில் புகுந்து, அவர்கள் மூச்சு வாங்குவதற்கு நேரம் பெற்றுக்கொடுத்து, ராஜபக்சக்களின் அதிகாரத்தைக் காப்பாற்றித் தக்கவைக்க வழிசெய்தவர் ரணில் விக்கிரமசிங்கதான். அதன்மூலம் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் அரசியல் ரீதியாக அவர் வரலாற்றுத் தவறிழைத்திருக்கின்றார். இவ்வாறு சாரப்பட சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன். கொழும்பின் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இந்த விடயங்களை விவரித்திருக்கின்றார். அந்தப் பேட்டியில் சுமந்திரன் தெரிவித்தவை வருமாறு:- “ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்ட இந்தப் பிரதமர் பதவியேற்பு சவாலை அறிவுள்ள வேறு எவருமே செய்திருக்கமாட்டார்கள். செய்ய முன்வந்தும் இருக்கவில்லை. உண்மையில் அவர் (ரணில்) செய்த விடயம் என்னவென்றால் ராஜபக்சக்களுக்கு நெருக்கடிக்கு மத்தியில் நின்று மூச்சு விடுவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுத்தமைதான். அதன்மூலம் அவர்கள்…
The post ராஜபக்ஷக்கள் ‘அவுட்’டாவதை தடுத்துக்காத்தவர் ரணில்தான்!சுமந்திரன் சரமாரிக் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜபக்ஷக்கள் ‘அவுட்’டாவதை தடுத்துக்காத்தவர் ரணில்தான்!சுமந்திரன் சரமாரிக் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
