சீனி இறக்குமதி முற்றாக நின்று போய்விடும்! தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை
15 view
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சீனி இறக்குமதி செய்யப்படுவது அடுத்த வாரத்தில் முற்றாக நின்று போய்விடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதன் பின்னர் பிரேசில் நாட்டில் இருந்து சீனியை இறக்குமதி செய்ய நேரிடும் எனவும் அது மிகவும் விலை அதிகம் எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார். அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை. நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டங்களும் இல்லை. எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சார துண்டிப்பு மற்றும் அத்தியவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்கான எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லை. அடுத்த வாரமளவில் சீனி இறக்குமதியும் முற்றாக நின்று போய்விடும் என்றே எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவும் சீனாவும் சீனி ஏற்றுமதியை முற்றாக நிறுத்தியுள்ளன. தானியங்களை ஏற்றுமதி செய்வதையும் இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவுக்கு தேவையான அளவை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால், இந்தியா ஏற்றுமதிகளை…
The post சீனி இறக்குமதி முற்றாக நின்று போய்விடும்! தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீனி இறக்குமதி முற்றாக நின்று போய்விடும்! தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
