கல்முனை நூலகம் தொடர்பாக மேயரி் விளக்கம்

34 view
(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர பொது நூலகம் தொடர்பாக முகநூல்களில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களும் தகவல்களும்  முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விசனம் தெரிவித்துள்ளார். கடந்த 2018/2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இந்நூலகம் முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டது. அப்போது நூலகத்தின் உட்பகுதிகளிலும் புனர்நிர்மாண வேலைகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்குள்ள பெறுமதி வாய்ந்த புத்தகங்கள் சிறிது காலம் பெட்டிகளிலும் மூடைகளிலும் கட்டி வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டிருந்தன. உள்ளக புனரமைப்பு வேலைகள் துரிதமாக பூர்த்தியடைந்த பின்னர் அப்புத்தகங்கள் வாசககர்களின் பாவனைக்காக வழமைபோல் புக்செல்ப்களில் முறைப்படி அடுக்கி வைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றன.   இந்நிலையில், புனரமைப்பு காலத்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை சில விஷமிகள் தற்போது முகநூல்களில் வெளியிட்டு, மாநகர சபையையையும் நூலக நிர்வாகத்தையும் விமர்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இது மக்களை குழப்புவதற்காக வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுகின்ற விஷமப்பிரச்சாரம் என்பதை இந்நூலகத்திற்கு அன்றாடம் வருகின்ற வாசகர்கள்…
The post கல்முனை நூலகம் தொடர்பாக மேயரி் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース