மாணவர்களின் போசாக்கு குறைபாடு; எதிர்கால சந்ததியினரின் கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்!
33 view
ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளமைக்கு அமைய, இலங்கையின் சனத்தொகையில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியினர் தமது அன்றாட உணவைக் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ள காரணத்தினால், எதிர்கால பாடசாலை மாணவர்களின் போசாக்கு குறைபாடு காரணமாக மூளை வளர்ச்சியின்மை உருவாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கத் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார். ஜூன் 14, 2022 அன்று வெளியிடப்பட்ட உலக உணவுத் திட்டத்தின் (WFP) அறிக்கையின்படி, இலங்கையில் 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன, மேலும் 4.9 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கையில் உள்ள விசேட வைத்திய நிபுணர்கள் சபை ஆகியன இந்த நாட்டில் உள்ள பாடசாலைகளில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். “ஒரு குழந்தையின் மூளையின் 80% வளர்ச்சி கருவுற்ற காலத்திலிருந்து 5 வயது வரை என்பதை…
The post மாணவர்களின் போசாக்கு குறைபாடு; எதிர்கால சந்ததியினரின் கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவர்களின் போசாக்கு குறைபாடு; எதிர்கால சந்ததியினரின் கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
