நாட்டில் பஞ்சம் தீர்க்க இதுதான் வழி! புஸ்பா விஸ்வநாதன் தெரிவிப்பு
5 view
மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் பாரமுகமாகவே அதாவது மாற்றான்தாய் மனபான்மையுடனே செயற்பட்டு வருகின்றனர் என மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளரும், கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார். கொட்டகலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த பொருளாதார நெருக்கடியை சுமூகமான நிலைமைக்கு கொண்டு வர முடியாத இந்த அரசாங்கம் முதலில் வெளியேற வேண்டும். தொடர்ந்தும் இந்த அரசாங்கம் இருந்து என்ன தான் பயன். ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் வெளியே சென்றால் மாத்திரமே வெளிநாடுகளில் உள்ளவர்கள் இலங்கைக்கு உதவி செய்ய முன்வருவார்கள். அப்போது தான் நாட்டில் பஞ்சம் தீர்க்க வழி பிறக்கும். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், மலையகம் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு அவர்களின் தேவைகளை பூரத்தி செய்து தருவதாகவே வாக்குறுதி வழங்கப்படுகின்றது.…
The post நாட்டில் பஞ்சம் தீர்க்க இதுதான் வழி! புஸ்பா விஸ்வநாதன் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் பஞ்சம் தீர்க்க இதுதான் வழி! புஸ்பா விஸ்வநாதன் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
