21 – 24 ஆம் திகதி வரை கூடுகிறது நாடாளுமன்றம்
5 view
நாடாளுமன்றம் இம்மாதம் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடவுள்ளது. 24ஆம் திகதி தவிர அனைத்து நாட்களிலும் வாய்மொழி விடைக்கான கேள்விகளுக்கு காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்ச் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு தொடர்பான பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் முதலாவது அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதம் மார்ச் 23ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், எதிர்வரும் 21ஆம் திகதி காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை குற்றவியல் நடைமுறைச் திருத்தச் சட்டமூலம் மற்றும் சிவில் நடைமுறைச் சட்ட திருத்தச் சட்டமூலம்…
The post 21 – 24 ஆம் திகதி வரை கூடுகிறது நாடாளுமன்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 21 – 24 ஆம் திகதி வரை கூடுகிறது நாடாளுமன்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
