நான் சொன்னதை கேட்டிருந்தால் விடுதலைப்புலிகளின் தலைவரை இழந்திருக்க மாட்டோம்! டக்ளஸ்
13 view
நான் 87ம் ஆண்டு சொன்னதை கேட்டிருந்தால் பிரபாகரன் அடங்கலாக இவ்வளவு அழிவுகள், இழப்புகள், துன்பங்கள், துயரங்கள் வந்திருக்காது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மாகாணங்களிற்கு அதிகாரங்கள் கொடுக்கப்படவில்லை என தமிழ்த்தரப்புக்கள் தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறான முயற்சிக்கு மத்திய அரசு அதிகாரமளிக்கும் என நம்புகின்றீர்களா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கரைப்பவன் கரைத்தால் கல்லும் கரையும் என நீண்ட காலமாக நான் சொல்லியும் வந்திருக்கின்றேன். செய்தும் வந்திருக்கின்றேன். இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியபோது நான்கு விடயத்தினை முன்வைத்திருந்தேன். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஊடாக தேசிய நீரோட்டத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டலாம் என நான் முன்வைத்து வந்தேன். அதனை நான் செய்தும் வந்தேன். துரதிஸ்டவசமாக மக்கள் ஆணை எனக்கு போதிய…
The post நான் சொன்னதை கேட்டிருந்தால் விடுதலைப்புலிகளின் தலைவரை இழந்திருக்க மாட்டோம்! டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நான் சொன்னதை கேட்டிருந்தால் விடுதலைப்புலிகளின் தலைவரை இழந்திருக்க மாட்டோம்! டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
