பரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸியை வீழ்த்தியது இலங்கை அணி!
4 view
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலிய அணியும் இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, 47.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ஓட்டங்களை பெற்றிருந்த போது, மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் குனெமன் மற்றும் மெக்ஸ்வேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்வெப்ஸன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து போட்டி ஆரம்பிக்கப்படுகையில், அவுஸ்ரேலிய அணிக்கு…
The post பரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸியை வீழ்த்தியது இலங்கை அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸியை வீழ்த்தியது இலங்கை அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
