நாளாந்த கேள்விக்கேற்ப பெற்றோல் டீசலை விநியோகிக்க முடியாது!
15 view
நாளாந்த கேள்விக்கு அவசியமான அளவு பெற்றோல் மற்றும் டீசலை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க முடியாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், நாளொன்றுக்கு 3,000 மெட்ரிக் டன் டீசல், 2,600 மெற்றிக் டன் பெற்றோல் என்ற வரையறையில் விநியோகிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுடன் தற்போது கையிருப்பில் உள்ள டீசல் தொகையை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை முகாமை செய்ய முடியும் எனவே டீசல் விநியோகத்தை அவ்வாறே தொடர்ச்சியாக முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம். கையிருப்பில் உள்ள பெற்றோலை 21 ஆம் திகதிவரை முகாமை செய்ய முடியாது. நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவை உபக்குழு நாட்டுக்கு அவசியமான பெற்றோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய மேலும் 2 நிறுவங்களுடன் ஒப்பந்தங்களை செய்ய அனுமதி வழங்கியது. அந்த நிறுவனங்களுக்கு நாணயக் கடிதங்களை விடுவிப்பது மக்கள் வங்கி ஊடாக…
The post நாளாந்த கேள்விக்கேற்ப பெற்றோல் டீசலை விநியோகிக்க முடியாது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளாந்த கேள்விக்கேற்ப பெற்றோல் டீசலை விநியோகிக்க முடியாது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
