எரிபொருள் தட்டுப்பாடு: நாடு முழுமையாக முடங்கும் அபாயம்
29 view
கொழும்பு,ஜுன் 16 எரிபொருள் அடங்கிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.குறித்த கப்பல் ஊடாக 40 ஆயிரம் மெற்றிக் டொன் டீசல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடன் திட்டத்திற்கு அமைவாக நாட்டை வந்தடைந்துள்ள இறுதி டீசல் கப்பல் இதுவாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே இன்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. உரிய விபரங்களை பெற்றுக்கொண்டு மக்கள் எரிபொருள் கொள்வனவில் ஈடுபடுமாறு அறிவுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விநியோகத்தில் உள்ளடக்கப்படாத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருப்பதன் ஊடாக பயனில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதன் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.மன்னார் நகரத்தில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்று வருகின்றனர். இராணுவம் மற்றும் பொலிஸாரின்…
The post எரிபொருள் தட்டுப்பாடு: நாடு முழுமையாக முடங்கும் அபாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிபொருள் தட்டுப்பாடு: நாடு முழுமையாக முடங்கும் அபாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
