பிரதமரின் செயற்பாடுகள் அனைத்தும் பைத்தியகார தனமானது! சமீர பெரேரா

13 view
நமது நாட்டில் மக்கள் நடத்தும் போராட்டங்களை பார்க்கும் போது, “சே குவேரா” தான் நினைவிற்கு வருகிறார் என ஐக்கிய பிரஜைகள் முன்னணியின் அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், நம் நாட்டில் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் அதிகரித்துள்ளது. இப் போராட்டங்களை பார்க்கும் பட்சத்தில் நமக்கு நினைவு வருவது “சே குவேரா” தான். காரணம் அவர் இராணுவத்திற்கு எதிராக போராடியவர். அதன்படி, அவர் இன மத பேதமின்றி போராடி 39 வயதிலேயே மரணித்த மனிதர். ஆனால், நமது நாட்டிலுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, செய்கின்ற வேலைகள் அனைத்தும் பைத்தியகார தனமாக காணப்படுகிறது. நேற்று, இந்த மாத முடிவில் எரிபொருள் இல்லை என கடும் வெயிலிலும், பசியிலும் வரிசையில் நிற்கும் மக்களிடம் கூறுகிறார். நாட்டின் பிரதமர் மக்களிற்கு கூறும் பதிலா இது? அத்துடன் இரு வேளை சாப்பிடுங்கள் என்று மக்களுக்கு கூறுகிறார். அதுமட்டுமின்றி, அரிசி தட்டுப்பாடு ஏற்படும், எரிபொருள் பற்றாக்குறைக்கு வாய்ப்புள்ளது…
The post பிரதமரின் செயற்பாடுகள் அனைத்தும் பைத்தியகார தனமானது! சமீர பெரேரா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース