இருப்பதை பகிர்ந்து வாழ்வோம்!
38 view
கடந்த பல மாதங்களாக தொடரும் எரிபொருள் பற்றாக்குறை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. வாகனங்கள் எரிபொருளுக்காக நிற்கும் வரிசையின் நீளம் முன்னரை விட நீண்டு செல்கிறது. எரிவாயுவுக்கும் இதே நிலைதான். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பொதுப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நேற்றைய தினம் ரயில் வண்டிகளின் கூரைமீதிருந்து பயணிக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் காண முடிந்தது.தினமும் இரண்டு மணித்தியாலத்திற்கும் அதிகமான மின்வெட்டு தொடர்கிறது. மின்சார சபை திட்டமிட்டு செயற்படாவிட்டால் அடுத்த மூன்று வருடங்களுக்கு இதே மின்வெட்டு தொடரும் என மின்சார சபை தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. பண வீக்கம் காரணமாக பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதனால் சகல தரத்திலுள்ள மக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் செய்வதறியாது தவிக்கிறார்கள். எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக காத்து நிற்கும் மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் மக்கள் தமது உணர்ச்சிகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். அனர்த்தம் ஒன்று வருகின்றபோது, பாதிக்கப்பட்ட…
The post இருப்பதை பகிர்ந்து வாழ்வோம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இருப்பதை பகிர்ந்து வாழ்வோம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
