நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள குடிநீர் திட்டங்களை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க திட்டம்!
5 view
நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான குடிநீர் திட்டப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த திட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டது. கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற நீர்வழங்கல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியின் கீழ் செயற்படுத்தப்படும் நீர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு ஜனாதிபதி கேட்டறிந்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியில் தற்போது 2337 பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான நீர் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பல வெற்றிகரமான முன்னேற்றம் கண்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 2019 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 467,808 புதிய நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதோடு, மேலும் 2025ஆம் ஆண்டாகும்போது, மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 5,946,352 இலக்காக இருக்கும். மக்களுக்கு சுத்தமான குடிநீரை…
The post நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள குடிநீர் திட்டங்களை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள குடிநீர் திட்டங்களை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
